கும்பகோணத்தில், ரூ.15 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

கும்பகோணத்தில், ரூ.15 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;

Update:2023-04-10 00:28 IST

கும்பகோணம்:

கும்பகோணம் 41-வது வார்டில் 800-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கண்ட பகுதியில் ரேஷன் கடை கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மேற்கண்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்