புதிய ரேஷன் கடை கட்டிடங்கள்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடங்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

Update: 2023-08-20 16:48 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சி சோ.புதூர், கடம்பை ஊராட்சி சிறுகொத்தான் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடங்கள் உள்ளிட்டவை திறப்பு விழா நடந்தது.

விழாக்களுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, சரக துணைப் பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் சோமாசிபாடி ஏழுமலை, கடம்பை மாரிமுத்து, வேடநத்தம் குப்புசாமி, கணியாம்பூண்டி ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

 சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சோ.புதூரில் ரூ7½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், சிறுகொத்தான் பகுதியில் ரூ.9.13 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசினார்.

அதைத்தொடர்ந்து வேடநத்தம் கிராமத்தில் ரூ.5.80 லட்சத்தில் காத்திருப்போர் கூடம் மற்றும் கால்நடை கிளை நிலையம், கணியாம்பூண்டி ஊராட்சியில் ரூ.2.91 மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை குத்துவிளக்கு ஏற்றி, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சிகளில் கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் கோகிலா, பொது வினியோக திட்ட அலுவலக கண்காணிப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, செயலாட்சியர் குமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், அட்மாகுழு தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கனபாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் வெற்றிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்