புதிய ரேஷன் கடை

நெல்லையில் புதிய ரேஷன் கடையை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்;

Update: 2022-09-28 23:32 GMT

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகர் பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வண்ணார்பேட்டைக்கு சென்று வந்தனர். அவர்கள் பகுதியிலேயே ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று இளங்கோநகரில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இந்த ரேஷன் கடையை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், மாநகர துணைச் செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் பிரிவுக்கு உட்பட்ட சேவியர் காலனியில் ரூ.6 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதனை நேற்று அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, சங்கர், உதவி மின் பொறியாளர் ஜன்னத்துல் சிபாயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்