புதிய மின்பாதை பணிகள்; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சாத்தான்குளம் யூனியன் நடுவக்குறிச்சியில் புதிய மின்பாதை பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். விஜயராமபுரம், காலன்குடியிருப்பு, இரட்டைகிணறு, நெடுங்குளம், பழங்குளம் பகுதியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும், அதிசயபுரத்தில் ரூ.8.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறப்பு, நடுவக்குறிச்சியில் புதிய மின் பாதை தொடங்கி வைத்தல், ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பில் ராஜமன்னார்புரம், முதலூர், சுண்டங்கோட்டை நாயனூர் வரை புதிய சாலை அமைக்கும் பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஞானியார்குடியிருப்பில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இரட்டை கிணற்றில் புதிய மின்மாறற்றியை இயக்கி மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தினார். அப்போது மக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் பிரேம்குமார், சுயம்புதுரை, நம்பியார், சகாயஎல்பின், தினேஷ் ராஜசிங், செல்வக்கனி, பாலமேனன், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், திருச்செந்தூர் மின் உதவி செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சிவிளை சுதாகர், குருசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.