ரூ.75 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
பணகுடியில் ரூ.75 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.;
பணகுடி:
பணகுடி பேரூராட்சி 1-வது வார்டு பாஸ்கராபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் சகாயபுஷ்பராஜ், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்குறுங்குடி நம்பிதலைவன்பட்டயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி, மாநில மீணவரணி துணை அமைப்பாளர் எரிக் ஜூட், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், நகர செயலாளர் கசமுத்து, பேரூராட்சி துணை தலைவர் மோளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.