புதுடெல்லி, சென்னை சென்டிரல் செல்லும்வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விருதுநகரில் புறப்படும் நேரம் மாற்றம்
புதுடெல்லி, சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விருதுநகரில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி-புதுடெல்லி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12641) வருகிற 16-ந் தேதி முதல் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்படும். நாகர்கோவில்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12690) வருகிற 20-ந் தேதி முதல் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்படும். இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு (நள்ளிரவு 12.55 மணி) புறப்படும்.