மன்னார்குடி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

மன்னார்குடி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

Update: 2023-06-28 18:45 GMT

மன்னார்குடி நகராட்சியின் புதிய ஆணையராக நாராயணன் பொறுப்பேற்றார். இவர், இதற்கு முன்பு சென்னை பூந்தமல்லி நகராட்சியில் ஆணையராக பதவி வகித்தார். தற்போது பதவி உயர்வு பெற்று மன்னார்குடி நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற நாராயணனுக்கு நகராட்சி தலைவர் மன்னை.சோழராஜன், துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர், கட்டிட ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகராட்சி அனைத்து நிலை பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்