கழுவன்குளத்திலிருந்து சிவகங்கைக்கு புதிய பஸ் வழித்தடம்
கழுவன்குளத்திலிருந்து சிவகங்கைக்கு புதிய பஸ் வழித்தடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பொட்டப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ளது கழுவன்குளம் கிராமம். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று இக்கிராமத்திலிருந்து சிவகங்கை செல்ல புதிய பஸ் வழித்தடத்தை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி, யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, ஈஸ்வரன், சுப்பையா, ஊராட்சி தலைவர்கள் குழந்திபிச்சை, ரவி, சக்திமுருகன், பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு மற்றும் கிளை நிர்வாகிகள் அண்ணாதுரை, கருப்புசாமி, சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய பஸ் சிவகங்கையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம், கீழடி, கொந்தகை, பொட்டப்பாளையம், விராதனூர், குசவபட்டி வழியாக கழுவன்குளம் சென்றடையும். பின்பு அதே வழித்தடத்தில் திரும்பி சிவகங்கை வரும். இந்த புதிய பஸ் சிவகங்கையிலிருந்து காலை 6.30 மணிக்கும், பிற்பகல் 3.30 மணிக்கும் புறப்பட்டு தினமும் 2 தடவை சென்று வரும் எனவும் கூறப்படுகிறது.