இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு புதிய மின்மாற்றி

இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2023-05-20 00:15 IST

இளையான்குடி

இளையான்குடி துணை மின் நிலையத்தில் கூடுதல் மெகா திறன் கொண்ட புதிய மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், செயற்பொறியாளர் ஜான்சன், உதவி செயற்பொறியாளர் உலகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர்கள் கண்ணதாசன், சிவக்குமார், உமா, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துக்குமரன், இளையான்குடி தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், விவசாய அணி காளிமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் இப்ராஹிம், நகர் கழக நிர்வாகிகள் ஜெய்னுலாபுதீன், காதர் பாட்சா, பைரோஸ்கான் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்