புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை; துரை வைகோ தொடங்கி வைத்தார்
கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனைக்கு புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை துரை வைகோ தொடங்கி வைத்தார்.
திருவேங்கடம்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவுப்படி, 108 ஆம்புலன்ஸ் சேவையை கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா ஆம்புலன்ஸ் சாவியை டிரைவரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துகுமார், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமொழி சந்திரகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்குமார், கிளை செயலாளர் நிறைபாண்டி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, பெரியதுரை, தி.மு.க மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட இளைஞர் அணி சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், செல்வகுமார், ராஜகோபால், ம.தி.மு.க. சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்.ஆனந்தராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற துரை வைகோ, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.