விளாத்திகுளம் அருகேசமூக சேவகரிடம் நில மோசடி

விளாத்திகுளம் அருகே சமூக சேவகரிடம் நில மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-10 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 65). சமூக சேவகர். இவர் விளாத்திகுளம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர், 'எனது வீட்டு தேவைக்காக விளாத்திகுளம் சிதம்பரநகரை சேர்ந்த வரதராஜ் மகன் மாடசாமி (வயது 65) என்பவரிடம் கடனாக ரூ.32 லட்சம் வாங்கினேன். அவர் தனக்கு நம்பிக்கை கிரய பத்திரம் எழுதி கொடுக்குமாறு கேட்டார். நானும் எனக்கு சொந்தமாக, விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியில் உள்ள நிலத்தை கிரயப்படுத்திரமாக எழுதி கொடுத்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் முழு பணத்தையும் அசலும், வட்டியுமாக கொடுக்க சென்றேன். ஆனால் மாடசாமி பணத்ைத வாங்க மறுத்ததுடன் இடத்தையும் தர முடியாது என்று கூறி ேமாசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ்ந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி, மாடசாமி, அவரது மனைவி மல்லிகா, மகன் குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்