வெள்ளோடு அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ விபத்து
வெள்ளோடு அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னிமலை
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட அனுமன்பள்ளி கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பெண் ஒருவர் தன்னுடைய மாட்டு கொட்டகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவி எரிய தொடங்கியது. உடனே இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டதா? என வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.