வளவனூர் அருகே கபடி போட்டி
வளவனூர் அருகே கபடி போட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்;
வளவனூர்
வளவனூர் அருகே உள்ள ராம்பாக்கம் காலனியில் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கபடி போட்டி நடைபெற்றது. இதை வளவனூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வளவனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 15 ஆண், பெண் ஆணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வளவனூர் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.