தூத்துக்குடி அருகேமாநில அளவிலான கைப்பந்து போட்டி
தூத்துக்குடி அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.;
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் இணைந்து 9-வது ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை நடத்தியது. இதில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கர்நாடக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில தலைவர் சந்திரகாந்த் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த கோவை அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ், கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.