டி.என்.பாளையம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; ரூ.2 லட்சம்-2 பவுன் நகை கருகி நாசம்
டி.என்.பாளையம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை கருகி நாசமானது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை கருகி நாசமானது.
தீப்பிடித்தது
டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 64), இவர் ஓலை குடிசை அமைத்து அதற்குமேல் தகர சீட்டுகள் போட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
பணம்-நகை நாசம்
எனினும் வீட்டுக்குள் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை, மளிகை பொருட்கள், துணிகள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்களும், பங்களாப்புதூர் போலீசாரும் நடத்திய விசாரணையில் விட்டில் உள்ள மின் ஒயரில் கசிவு ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட தீப்பொறி மேற்கூரையில் உள்ள ஓலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.