திருநாவலூர் அருகே கார் மோதி வாலிபர் பலி

திருநாவலூர் அருகே கார் மோதி வாலிபர் உயிாிழந்தாா்.

Update: 2022-11-14 18:45 GMT

திருநாவலூர், 

திருநாவலூர் அடுத்த பாதூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, அந்த வாலிபர் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டிவந்த டிரைவரும், பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்