ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்.

Update: 2023-08-04 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் வக்கீல் உட்பட 11பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 33). இவர் மீது செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆடு, மணல் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாயாண்டி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி செல்வி (30) என்பவரும் காயம் அடைந்தார்.

2 பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில், கால்வாய் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் அர்ஜூனன் (40), அவரது சித்தப்பா மகன் ஆறுமுகம் (45) உள்ளிட்ட 13 பேர் இக்கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

இதில் நேற்று அர்ஜூனன், ஆறுமுகம் ஆகிய 2 பேரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் வக்கீல் தெய்வக் கண்ணன் உட்பட 11பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்