பெருந்துறை அருகே திராவகத்தை குடித்து பெண் தற்கொலை

பெருந்துறை அருகே திராவகத்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-09 21:36 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே திராவகத்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சல்

பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி வி.ஐ.பி.நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 54). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி உமா மகேஸ்வரி (44).

இவர் கடந்த 3 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

திராவகத்தை குடித்து தற்கொலை

இந்த நிலையில் வெங்கடாசலம் கடந்த 7-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் உமா மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை எடுத்து குடித்துவிட்டு் வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய வெங்கடாசலம் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உமா மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்