பெரியகுளம் அருகேமோட்டார்சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.;

Update:2023-06-17 00:15 IST

பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா. இவரது மகன் முகமது ஹனான் (வயது 7). நேற்று இவன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது முகமது ஹனான் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசில் செய்யது அலி பாத்திமா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்