குமராட்சி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூட்டுறவு கடன் சங்க தலைவர் பலி

குமராட்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-25 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே செங்கழுநீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 66). இவர் பிள்ளையார்தாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்து வந்தார். இவர் அதே ஊரைச்சேர்ந்த தொழிலாளி சேகர் (55) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காட்டுமன்னார்கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருநாரையூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் பாலகிருஷ்ணன், சேகர் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்