இரும்பேடு கூட்ரோடு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றம்

இரும்ேபடு கூட்ரோடு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதனால் போலீஸ் - கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2023-10-24 18:45 GMT

ஆரணி

இரும்ேபடு கூட்ரோடு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதனால் போலீஸ் - கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கொடிக்கம்பம் அகற்றம்

ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேடு கூட்ரோடு அருகே சுமார் 40 ஆண்டுகளாக அ.தி.மு.க. கொடிக்கம்பம் இருந்து உள்ளது. தற்போது கட்சியின் 52-வது ஆண்டு விழா கொண்டாடுவதற்காக கொடிக் கம்பத்தை கழட்டி வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. கொடி கம்பம் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு

ஆரணி துணை போலிஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு குவிந்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இது சம்பந்தமாக நாளை (இன்று) சமரச கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் அதே இடத்திலேயே கொடி கம்பத்தை வையுங்கள், அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். அதைத்தொடர்ந்து அதே இடத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்