எட்டயபுரம் அருகே ஊரணியில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

எட்டயபுரம் அருகே ஊரணியில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் ஆண்டாள் நகரில் 6-வது தென்மேற்கு தெருவில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் தென்னை மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு உடந்தையாக உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், போலீஸ் அதிகாரிகளை கண்டித்தும் ஆண்டாள் நகரில் வசிக்கும் மக்கள் வீட்டை காலி செய்து, ஊருக்கு தென்புறமுள்ள சின்னூரணியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, வருவாய் ஆய்வாளர் சாந்தா, கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், சத்தியசீலன் உள்ளிட்டோர் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாளை (இன்று) தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்