கூடலூர் அருகேகார் மோதி தொழிலாளி படுகாயம்

கூடலூர் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தனர்.;

Update: 2023-02-19 18:45 GMT

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொச்சு புரைக்கல் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பொன்னன். இவர் தனது காரில் குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசுமை நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பையா என்பவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்