கடலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு
கடலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம்
கடலூர் ஒன்றியம் புதுக்கடை ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்கள் சரியான முறையில் பணியில் ஈடுபடுகிறார்கள்?, அனைவரும் பணிக்கு சரியான முறையில் வந்திருக்கிறார்களா?, என்றும் இதுவரை நடந்த பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அதே கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசு வழங்கியுள்ள காலகெடுவிற்குள் வீடு கட்டும் பணிகளை முடிக்க வேண்டும், தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாசலம், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.