கடலூர் அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த காவலாளி சாவு கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த காவலாளி உயிாிழந்தாா்.

Update: 2022-11-12 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த குமராபுரத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 59) .இவர் தோட்டப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிாில் உள்ள பழைய இரும்பு கடையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தபோது அங்கு வந்த 2 போ், கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர். இதைபார்த்த முருகையன் அவர்களை தடுக்க முயன்றபோது, அவர்கள் அங்கிருந்த மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் முருகையன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, முருகையனை தாக்கியதாக தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த திவாகரன் (19), நத்தப்பட்டு காலனியை சேர்ந்த ஜின்னா என்கிற தமிழ் வல்லவன் (20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகையன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்