போடி அருகேஓடையில் கிடந்த ஆண் பிணம்

போடி அருகே ஓடையில் ஆண் பிணம் கிடந்தது.;

Update:2023-03-26 00:15 IST

போடியை அடுத்த கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோவில் அருகே வஞ்சி ஓடை உள்ளது. இந்த ஓடை பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகே நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு சுற்றித்திரிந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஓடையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

பின்னர் பொதுமக்கள் போடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்