போடி அருகேகுரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ:அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர காட்த்தீ ஏற்பட்டது.

Update: 2023-02-27 18:45 GMT

போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று அதிகாலை காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த தீ புலியூத்து வனப்பகுதியில் இருந்து ஹெவிகுண்டு என்னும் மலைப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பற்றி எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் வனத்துறையினரும் அங்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு, வனத்துறையினர் இ்ணைந்து பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போதிய உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 7 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் பற்றி எரிந்த காட்டுத்தீயால் வனப்பகுதியில் இருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. இந்த பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்