அம்மாபேட்டை அருகேபஸ் மோதி வாலிபர் பலி

அம்மாபேட்டை அருகே பஸ் மோதி வாலிபர் பலியானாா்

Update: 2023-08-11 22:35 GMT


அம்மாபேட்டை அருகே பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.

வேளாண்மை பட்டதாரி

அம்மாபேட்டையை அடுத்த சிங்கம்பேட்டை கேட், சின்னக்காட்டூர் விநாயகர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 29). பி.எஸ்.சி. வேளாண்மை படித்து உள்ளார். அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சிங்கம்பேட்டையில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது.

சாவு

இந்த விபத்தில் பஸ்சின் அடியில் சிக்கி விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்