நாசரேத் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை

நாசரேத் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Update: 2023-04-10 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் கத்தீட்ரலில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை மாலையில் ஆயத்த ஆராதனை அனுசரிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற ஆராதனையில் கத்தீட்ரல் உதவி உருவானவர் பொன் செல்வின் அசோக்குமார் தேவ செய்தி அளித்தார். அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தேவ செய்தி அளித்தார். காலை 9 மணி ஆராதனையில் மூக்குப்பீறி சேகர குருவானவர் தேவ செய்தி அளித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்டு ஆராதனையாக கடைபிடிக்கப்பட்டது. இதில் ஈஸ்டர் சிறப்பு பாடல்களை கத்தீட்ரல் பாடகர் குழுவினர் பாடினர். பின்னர் ஆலய வளாகத்தில் வான வேடிக்கை நடைபெற்றது.

பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேத் ஜெரால்டு தலைமையில் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடந்தது. திருமறையூர் மறுரூப ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதேபோன்று நாசரேத் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்