எட்டயபுரத்தில் நாயன்மார் குருபூஜை
எட்டயபுரத்தில் நாயன்மார் குருபூஜை நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அடியவர்க்கு அடியவர்கள் அமைப்பின் சார்பாக ஆனி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா கான்சாபுரம் பால விநாயகர் கோவில் திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சண்முகம் பிள்ளை தலைமை தாங்கினார். மாணிக்கவாசகர், அமர் நீதி நாயனார், காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஏயர்கோன் கலிக்காம நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் வரலாற்றை சண்முகம், சங்கரன் ஒதுவார் ஆகியோர் எடுத்துக் கூறினா். நிகழ்ச்சியில் அடியவர்க்கு அடியவர்கள் அமைப்பின் செயலாளர் ஆவுடைநாயகம், பொருளாளர் ராமநாதன், சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.