நாயனத்தியூர் ஏரி 20 வருடங்களுக்கு பிறகு கோடி போனது
நாயனத்தியூர் ஏரி 20 வருடங்களுக்கு பிறகு கோடி போனது. பொதுமக்கள் கிடாவெட்டி வரவேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நாயனத்தியூர் ஏரி 20 வருடங்களாக நிரம்பாமல் இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையாலும், தற்போது பெய்து வரும் மழையாலும் இந்த ஏரியானது நேற்று முழு கொள்ளளவை எட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோடி போனது. இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து கோடிகும் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அம்மணாங்கோயில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.