நவராத்திரி கொலு விழா

திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி கொலு விழா விசாலாட்சி பொன்முடி பங்கேற்பு;

Update:2022-10-06 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டிருந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. முன்னதாக ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 8 மணிக்கு நவராத்திரி கொலுமண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சிபொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவிமுருகன், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், தி.மு.க. நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், அவைதலைவர் குணா, கவுன்சிலர்கள் புவனேஸ்வரிராஜா, சுதாகோபி, மீனா, கிருபா, நகர இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் நவீன், தொ.மு.ச. நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்