திருச்செந்தூர் கோவிலில் நவராத்தி கொலு

திருச்செந்தூர் கோவிலில் நவராத்தி கொலு வைக்கப்பட்டது.

Update: 2023-10-15 18:45 GMT

திருச்செந்தூர்:

நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் 5 அடுக்குகள் கொண்ட செட்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரிசையாக 5 இடங்களில் வண்ண வண்ண சுவாமி, அம்மன், தேச தலைவர்கள் உள்ளிட்ட பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 மகாதேவர் சன்னதி முன்பு தெப்பம் வைத்து முளைப்பாரியும் வளர்க்கப்படுகிறது. பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை நேற்று கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்