தேசிய ஊட்டச்சத்து மாதவிழா

மிட்டூரில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா நடந்தது.

Update: 2022-09-20 11:02 GMT

வாணியம்பாடி

ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி கலந்து கொண்டு தன் சுத்தம் பற்றியும், ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை இவற்றின் பின்விளைவுகளை பற்றியும் மாணவிகளுக்கு எளிமையான முறையில் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரகுபதி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்