மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்-20-ந் தேதி முதல் வியாழக்கிழமைகளில் நடக்கிறது
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் 20-ந் தேதி முதல் வியாழக்கிழமைகளில் நடக்கிறது
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் 20-ந் தேதி முதல் வியாழக்கிழமைகளில் நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை பெற ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 4 புகைப்படத்துடனும், மேலும் அடையாள அட்டை புதுப்பிக்க ஏற்கெனவே பெறப்பட்ட அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 4 புகைப்படத்துடனும் வர வேண்டும்.
மேலும் முகாமில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணையதள பதிவும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இ்வ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.