மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
ஆம்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.;
ஆம்பூர்
ஆம்பூர் ஐ.ஈ.எல்.சி. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 139 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் 24 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மின்னூர் ஊராட்சியில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மின்னூர் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் 19 தொகுப்புகளில் ஒரு தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் மொத்தம் 76 வீடுகள் கட்டுமான பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.