நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் 2-வது நாளாக தர்ணா போராட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் 2-வது நாளாக தர்ணா போராட்டம்

Update: 2022-07-19 17:00 GMT

புள்ளாகவுண்டன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதன் மூலம் படைவீடு பேரூராட்சிக்கு உட்பட்ட பாதரை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் கிராமங்களில் உள்ள ஏரிகளை நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க நேற்று முன்தினம் பா.ஜனதாவினர் வந்தனர். அப்போது கலெக்டர் இல்லாததால், அவர் நேரில் வந்து மனுவை வாங்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள் நேற்று கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் மக்கள் பிரச்சினைக்கு கலெக்டர் முக்கியத்துவம் தருவது இல்லை என கூறி நேற்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக நிர்வாகி ஒருவர் மனுவை தரையில் வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்