நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 வாகனம் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நாமக்கல் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பஸ்சுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததும், வரி செலுத்தாமல் பஸ் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி பஸ்சை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் உரிய ஆவணமின்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த மற்றொரு தனியார் வாகனமும், 2 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹெல்மட் அணியாமல் சென்றது, சீட் பெல்ட் அணியாதது மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது என மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.