நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நடைபயணம்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நடைபயணம்

Update: 2022-06-07 15:48 GMT

நாமக்கல்:

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓசூரில் புறப்பட்ட நடைபயண குழுவினர் நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக நாமக்கல் வந்தனர்.

நாமக்கல் உழவர்சந்தையில் இருந்து எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் வரை நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடைபயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் மாநில துணை தலைவர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் நடேசன், தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, ஆண்டகளூர்கேட், புதுச்சத்திரம், புதன்சந்தை, என்.புதுப்பட்டி மற்றும் வளையப்பட்டி பகுதியிலும் பிரசார நடைபயணம் நடைபெற்றது.

========

Tags:    

மேலும் செய்திகள்