நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Update: 2024-05-13 03:21 GMT

சென்னை,

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (67 வயது) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாகை எம்.பி. செல்வராஜின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்