ஈரோடு காரைவாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா
ஈரோடு காரைவாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா
ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று கோவிலில் நாக பஞ்சமி விழா நடந்தது. இதையொட்டி பிற்பகல் 3.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து நாகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.