நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு காட்டூர்- தத்தைமஞ்சி தடுப்பணை பணி - விரைந்து முடிக்க அறிவுரை

காட்டூர்- தத்தைமஞ்சி தடுப்பணை பணிகளை நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க நீர்வளத்துறைக்கு அறிவுரை வழங்கினர்.

Update: 2023-02-26 08:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர், தத்தைமஞ்சி ஆகிய 2 ஏரிகளை இணைத்து நீர்தேக்க தடுப்பு அணை கட்டி சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க ரூ.66 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டில் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு நபார்டு வாங்கி நிதி உதவி அளித்தது. இந்த நிலையில் ஆரணி ஆற்றில் குறுக்கே ஆண்டார்மடம் கிராமத்தில் கடல் நீர் உள்ளே புகாமல் இருக்க தடுப்பு சுவருடன் புதிய தடுப்பணை கட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காட்டூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் தடுப்பணைகளை கட்டுவதுடன், 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரைகளை உயர்த்தி சீரமைக்க பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காட்டூர்- தத்தைமஞ்சு ஏரிகளை இணைத்தால் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில் நபார்டு வங்கி அதிகாரிகள் பணி குறித்து ஆய்வு செய்வதற்கான தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரியுடன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகள் மெதுவாக நடைபெறுவதாகவும், பணிகளை விரைந்து முடிக்க நபார்டு வங்கி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இதனை ஏற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடித்து விடுவதாக உறுதியளித்தனர். இந்த பணிகள் முடிவடைந்தால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் உயரும். மேலும் விவசாயிகள், பொதுமக்கள் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்