முதல் -அமைச்சர் குறித்து அவதூறு; நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

கைதான விஜில் ஜோன்ஸ் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

Update: 2024-02-20 12:54 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க.வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் (வயது 62) தக்கலை போலீசில் கடந்த மாதம் ஒரு புகார் கொடுத்தார். முகநூலில் எனது கட்சி தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பற்றி விஜில் ஜோன்ஸ் என்பவர் அவதூறாக பதிவிட்டிருந்தார்.

ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜில் ஜோன்ஸ் பற்றி விசாரணை நடத்தினர், அவர் பெங்களூருவில் இருப்பதை தெரிந்து கொண்ட தக்கலை போலீசார் பெங்களூருவுக்கு சென்று விஜில் ஜோன்சை இன்று தக்கலைக்கு அழைத்து வந்தனர்,

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாகர்கோவிலை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார் என தெரியவந்தது, இதைத்தொடர்ந்து விஜில் ஜோன்சை கைது செய்த போலீசார் பின்னர் பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்