ஏர்வாடி கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத இரும்பு மிதவை - பொதுமக்கள் அச்சம்...!
ஏர்வாடி கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத இரும்பு மிதவையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடல் பகுதியில் இன்று காலை சுமார் ஒரு டன் எடை கொண்ட மர்ம பொருள் கரை ஒதுங்கியது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் கடலோர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்வம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கடலில் மிதந்து வந்த அந்த மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
ஏர்வாடி கடல் பகுதில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் இரும்பு மிதவை என்பது தெரியவந்து உள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பொருளால் எந்த ஆபத்தும் இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.