திருச்செந்தூர் அருகே விவசாயி மர்ம சாவு: உடலைவாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்

திருச்செந்தூர் அருகே விவசாயி மர்மான முறையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலைவாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-28 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன் புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 67). விவசாயி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சோனகன்விளை ரைஸ்மில் பின்புறம் காட்டு பகுதியில் உடலில் துணி எதுவும் இல்லாத நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த பேச்சியம்மாள் தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இறந்து இருப்பதாகவும், இதற்கு காரணமான ஒருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் புகாரில் குறிப்பிட்டநபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிவலிங்கம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இறந்த சிவலிங்கம் குடும்பத்தினர் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உடனடியாக புகாரில் கூறப்பட்டுள்ள நபரை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் நாங்கள் உடலை வாங்குவோம் என தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு பின்னர், உறவினர்கள் நேற்று இரவு சிவலிங்கம் உடலை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்