"என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம்" - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு

தன்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரின் அறிவுரையே காரணம் என அதிமுக நகர செயலாளர் கூறியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-24 06:27 GMT

சிவகங்கை,

தன்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரின் அறிவுரையே காரணம் என அதிமுக நகர செயலாளர் புகழாரம் சூட்டியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியின் 28-வது பேரவை கூட்டத்தில் பேசிய அவ்வங்கியின் தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான என்.எம் ராஜா, திமுக மாவட்ட துணை செயலாளரின் அறிவுரைப்படி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் செயல்பட வேண்டுமென்றும், தான் ஒரு வார்டு செயலாளராக இருந்து நகர செயலாளராக உயர்ந்துள்ளதற்கு அவரின் அறிவுரையே காரணம் எனவும் தெரிவித்தார்.

இது அப்பகுதி அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்