என் நகரம் என் பெருமைக்கான தூய்மை பணி

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் என் நகரம் என் பெருமைக்கான தூய்மை பணி நடைபெற்றது.

Update: 2023-02-11 13:18 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் 'என் நகரம் என் பெருமை' நகர தூய்மைகான உறுதிமொழி ஏற்கபட்டு அனைத்து வார்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணியினை தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஒட்டுமொத்த தூய்மை பணியின் மூலம் பேரூராட்சியில் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை தூர்வாரியும், சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபிகா முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்