முத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Update: 2023-05-09 16:27 GMT


முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 தேர்வை மொத்தம் 154 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 149 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன்படி பள்ளியின் மாணவி செ.கல்பனா ஸ்ரீ 600-க்கு 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி செ.ஸ்ரீ முகி 559 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவன் கே.ஹரி பிரசாந்த் 539 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும் பொருளியல், வணிகவியல், கணினி பயன்பாடு பாடங்களில் 3 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 3 பேரும் என மொத்தம் 6 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 15 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளனர்.

இதனை தொடர்ந்து பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.நடராஜ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ரொக்க தொகை ரூ.5 ஆயிரம், பரிசு கேடயம் வழங்கினார். விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜி.வேல்முருகன், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்