மத்திய இணை மந்திரி ஷோபாவுக்கு முத்தரசன் கண்டனம்

மத்திய இணை மந்திரி ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-03-20 09:52 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல இணை மந்திரி ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு, ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக, உண்மைக்கு மாறான தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செய்தியை வெளியிட்டுள்ளார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது. மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட இக்கருத்து, அரசியல் சட்ட மாண்புகளுக்கு எதிரானது. கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்து, அந்த மந்திரி மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்