முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிவந்திபுரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜபூஜை, நவக்கிரகஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சனஹோமம், துர்கா ஹோமம், தனபூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன.
மூலஸ்தான விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், உச்சினிமகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் செயலாளர் தர்மராஜ், பொருளாளர் தங்கராஜா மற்றும் திருப்பணி கமிட்டியினர் செய்து இருந்தனர்.